சோலோ ஹீரோயினா கூப்பிடுங்க… : சம்பளத்தை குறைப்பாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சொன்னால் நம்ப மாட்டீர்கள்…

இப்போதைக்கு கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார் ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்தப் படத்தில் அவருடைய இயல்பான நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் ஒரு ஹிந்தி படத்திலும் கூட கமிட்டாகியிருக்கிறார்.

இப்படி நடப்பவைகள் எல்லாமே நல்லதாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சந்தோஷமே இல்லையாம்.

ஏன்?

டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் தேடி வந்தாலும், எல்லாக் கதைகளிலும் இரண்டு நாயகிகள், மூன்று நாயகிகளில் ஒருவராகத்தான் நடிக்கக் கூப்பிடுகிறார்களாம் இயக்குநர்கள்.

இதனால் அப்செட்டாகியிருக்கும் அவர். தன்னைத் தேடி வருகிற இயக்குநர்களிடம் ”சோலோ ஹீரோயின் கேரக்டர் இருந்தால் கூப்பிடுங்கள். என் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்கிறேன்” என்று சலுகை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

சின்ன மீனை போட்டுத்தானே பெரிய மீனை புடிக்கணும்!

Aishwarya Rajeshஐஸ்வர்யா ராஜேஷ்
Comments (0)
Add Comment