எம்.ஜி.ஆர் – லதா பற்றி சீப்பான கமெண்ட்! – வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி

மூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருபவர் நடிகை கஸ்தூரி.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, எம்.ஜி.ஆரையும், லதாவையும் தொடர்பு படுத்தி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். அவருடைய இந்தக் கருத்தை பலரும் எதிர்த்த நிலையில், மாஜி நடிகை லதா நடிகை கஸ்தூரிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..?

எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..” இவ்வாறு லதா கஸ்தூரியை கண்டித்திருக்கிறார்.

லதாவின் கடும் கண்டனத்தை அடுத்து “நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை. இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.” என்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.

KasthurilathamgrMovie News
Comments (0)
Add Comment