தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார். “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.