நட்பு பாராட்ட ஆரம்பித்தால் புது அத்யாயத்தையே உருவாக்கி விடுவார் நடிகை பூஜா. நடிகைகளை விட நடிகர்களுடன் தான் அவருடைய நட்பு நெருக்கமாக இருக்கும். அதிலும் ஆர்யா என்றால் ”அவரு எனக்கு அம்புட்டு உசுரு” என்கிற ரேஞ்சில் சிலாகிப்பார்.
எந்தளவுக்கு நட்பு பாராட்டுவதில் டீப்பாக இருக்கிறாரோ அதே அளவுக்கு நடிப்பிலும் கலக்குவார். அதற்கு பாலாவின் ‘நான் கடவுள்’ படமே உதாரணமாகப் போதும்!
அப்படி நடித்தும் கூட எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் அமையாததால் தனது சொந்த நாடான இலங்கைக்கு பயணப்பட்டவர் அங்கு சிங்களப்படங்களிலும், ஆல்பங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்தவர் அப்படியே இலங்கை தமிழ் மாடல் ஒருவரையும் காதலித்தார்.
அரசல் புரசலாக இந்தச் செய்தி வெளியானவுடன் மறுக்காமல் ஒப்புக்கொண்டவர் விரைவிலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறோம் என்றும் அறிவித்தார். அப்படி அறிவித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. இன்னும் திருமணம் செய்தபாடில்லை.
இதற்கிடையே அந்த தீவிரமான காதலில் கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்களாம். இதனால் மீண்டும் நடிக்க ஆசையோடு இருப்பவர் சென்னையிலேயே முகாமிட்டு தனக்கு தெரிந்த இயக்குநர்களுக்கு போனைப்போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
எதிர்முனை தான் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறதாம்.
நல்லா நடிக்கிற பொண்ணு… யாராவது அண்ணி, அக்கா சான்ஸாவது கொடுங்கப்பா…