விஷால் அணியினர் வெட்கப்படணும்! : மீண்டும் வம்பை வளர்க்கிறாரா ராதிகா?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றி பெற்று சங்கத்தை கைப்பற்றி விட்டனர்.

அடுத்த நாளே நிருபர்களை சந்தித்த முன்னாள் தலைவர் சரத்குமார் நானே எஸ்பிஐ சினிமாஸ் உடன் போட்ட கட்டிட ஒப்பந்தத்தை சென்ற செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்து விட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.

என்னைப் பற்றி தவறான செய்திகள் வருவது எனக்கு பெரிய மனவேதனையைத் தந்திருக்கிறது என்று ரத்து செய்ததற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

அப்படியானால் இதோடு நடிகர் சங்கப் பஞ்சாயத்துகள் எல்லாம் முடிந்து விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் மீண்டும் ஒரு மோசமான கமெண்ட்டைப் போட்டு வம்பை வளர்த்திருக்கிறார் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா.

” என் கணவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். ஆனால் அவர் அந்த ஒப்பந்தைத்தையே ரத்து செய்து விட்டார். இனி நீங்கள் அவமானத்தால் தலை குனியுங்கள் நண்பர்களே… நான் சரத்தை நினைத்துப் பெருமைப் படுகிறேன் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இனி இது எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பாணடவர் அணியினர் கொடுக்கும் பதிலில் தான் தெரியவரும்.

ஆக மொத்த நடிகர் சங்க விவகாரம் இன்னும் சில வாரங்களுக்கு சூடு குறையாது போலிருக்கிறது.

Nadigar SangamRadhikasarathkumar
Comments (0)
Add Comment