பிரபல ஆபாசப் பட நடிகையான சன்னி லியோன் முதல் முறையாக நேரடித் தமிழ்ப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார்.
வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் இப்படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.
முன்னதாக இந்த படத்தின் டைட்டிலை மிகச்சரியாக யூகித்து சொல்லும் ரசிகர்கள் படபூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற போட்டி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு அது இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது.
இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு டைட்டிலை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் வீரமாதேவி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திரப் பின்னணி கொண்ட கதையாக இருந்தாலும் படத்தில் சன்னி லியோனின் கவர்ச்சி இருக்குமா? இருக்காதா? என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை சன்னி லியோன் பூர்த்தி செய்வார் என்றே தெரிகிறது.