தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா 2’ என்ற மெகா ஹிட் படத்தில் நடித்தும் கூட எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.
மற்ற மொழிகளிலும் இதே பரிதாப நிலை ஏற்பட்டதால் கடந்த சில வருடங்களாக ஹிந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையே ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக பழகி வந்தார்.
தற்போது இந்த இரண்டு பேரில் பேட்மின்டன் வீரர் மேதிஸுடன் டாப்ஸிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கோவாவில் எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் டாப்ஸியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனராம்.
கைவசம் ஒன்றிரெண்டு படங்கள் மட்டுமே உள்ளதால் அவைகளை முடித்து கொடுத்த பிறகு இல்லற வாழ்க்கையில் மேதிஸ் உடன் அடுத்த ஆண்டு இணையப் போகிறாராம் டாப்ஸி.