சுதந்திர தினம் முடிந்து விட்டது, விநாயகர் சதுர்த்தியும் போய் விட்டது.
ஆனால் அஜித்தின் 56 வது பட டைட்டில் தான் இன்னும் வந்தபாடில்லை.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தின் டைட்டிலை மேற்சொன்ன இரண்டு விசேஷ நாட்களிலும் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே சொல்லப்பட்டதாக மீடியாக்களில் பேசிக்கொண்டார்கள்.
அதை நம்பிய அஜித் ரசிகர்களும் காத்திருந்தார்கள். ஆனால் டைட்டில் குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி அன்று அஜித் பட டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்கிற செய்தி பரவியதற்கு காமெடி பீஸு ரோபோ சங்கர் தான் காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.
சும்மா இருக்கிற அஜித் ரசிகர்களை அஜித் படம் குறித்தான முக்கிய செய்தி வெளியாகும் என்று பரப்பி விட்டு சும்மா இருந்த அஜித் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு விட்டாராம்.
மீன் பிடிக்கிற இடத்துல கோயில் யானைக்கு என்ன வேலை..?