இன்னொரு தடவை தெறிக்க விடலாமா..? : சிவாவுக்கு அஜித் காலிங்!

‘வீரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா காம்பினேஷனில் தீபாவளி விருந்தாக ரிலீசானது வேதாளம்.

முந்தைய வீரம் படத்தை விட டபுள் மடங்கு கமர்ஷியல் படமாக எடுத்த சிவா படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைப் பார்த்து சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போயிருக்கிறார்.

முதல்நாள் வசூலே 17 கோடியைத் தாண்டி ரஜினி, விஜய் படங்களின் வசூல் சாதனையே முறியடித்து இருக்கிறது.

இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்ட தியேட்டர் அதிபர்களும் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

வசூல் நிலவரம் குறித்த விஷயங்கள் அவ்வப்போது அஜித்தின் காதுகளை எட்டவும் அவர் இயக்குநர் சிவாவை போன் போட்டு மனதாரப் பாராட்டி வாழ்த்துகளும் சொல்லியிருக்கிறார்.

அதோடு அஜித் வைத்த சர்ப்ரைஸ் வேண்டுகோள் தான் சிவாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

இன்னொரு கமர்ஷியல் கதை இருந்தா சொல்லுங்களேன் இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம் என்ற வேண்டுகோள் தான் அது. அஜித்தின் இந்த திடீர் வேண்டுகோளை கேட்ட சிவா பதில் சொல்ல கொஞ்சம் டைம் கேட்டிருக்கிறாராம்.

அஜித்துடன் இரண்டு படங்களில் வேலை செய்தது போதும், அடுத்த படம் சிவகார்த்திகேயனுடன் இணையலாம் என்று முடிவெடுத்திருந்தாராம் சிவா, இப்போது அஜித்தே அடுத்த படத்துக்கு தயாராக இருப்பதால் அவரோடு இணையலாமா? அல்லது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கப் போய் விடலாமா? என்று யோசித்து வருகிறார்.

எதுவாக இருந்தாலும் அஜித்துக்கு மூன்று மாத மருத்துவ ஓய்வுக்குப் பிறகு தான் ரிசல்ட் தெரிய வரும்.

AjithkumarDirector SivaVedalam
Comments (0)
Add Comment