ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் வியாபாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“அஜித்குமாருக்கு வெளிநாடுகளில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட் உள்ளது. அதனால் விஸ்வாசம் படத்தை ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் விஸ்வாசம் படத்தை வெளியிடுகிறோம். உண்மையில், இந்த நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இதுதான்.
ஆனால், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் ரஷ்யாவில் 8-க்கும் அதிகமான நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கப் போகிறது என்கிறார் செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் பிரசாந்த். இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்டிருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் ஏ & பி குரூப் சார்பில் கைப்பற்றியிருக்கிறார்.