எந்த ஒரு கருத்து கணிப்பு நடந்தாலும் அதில் அஜித் – விஜய் இருவரும் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை இரண்டு பேரின் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
ஒருவர் முன்னாடி, இன்னொருவர் பின்னாடி என்றாலு அது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் அடித்தும் கொள்வார்கள்.
அப்பத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரபல பத்திரிகையான போர்பஸ் பத்திரிகை 2016ம் ஆண்டுக்கான 100 சிறந்த பிரபலங்கள் லிஸ்ட்டை வெளியிட்டது.
இதில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் 13-வது இடத்திலும், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் 35-வது இடத்திலும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் 46-வது இடத்திலும் சூர்யா 51-வது இடத்திலும், ‘இளைய தளபதி’ விஜய் 61-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
இப்படி தமிழ்சினிமா திரையுலக பிரபலங்கள் பலர் இடம்பெற்றிருக்கும் இந்த பிரபலமான 100 இந்திய பிரபலங்கள் லிஸ்ட்டில் நூறு இடங்களில் ஒன்றில் கூட அஜித் பெயர் இடம்பெறவில்லை.
2015-ம் ஆண்டில் அஜித்துக்கு என்னை அறிந்தால், வேதாளம் என இரண்டு படங்கள் ரிலீசானது. ஆனால் 2016- ம் ஆண்டில் அஜித்துக்கு ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. அதேசமயம் விஜய்க்கு 2016-ம் ஆண்டில் தெறி திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதனால் தான் 20165-ம் ஆண்டு பிரபலங்கள் லிஸ்ட்டில் அஜித் பெயர் இடம்பெறவில்லை என்று தெரிகிறது.
ஏற்கனவே ரசிகர்களிடமிருந்து முழுமையாக ஒதுங்கியிருக்கிறார் அஜித் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து அவர் மீது வைக்கப்பட்டு வருகிற நிலையில் இப்போது இதுபோன்ற பிரபலங்கள் தரவரிசையிலும் அவர் பெயர் இடம்பெறாமல் இருந்தது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.