அஜித்தின் அடுத்த படம்? : ஆரம்பமே சிக்கல்!!!

‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்கிற பஞ்ச் பேசுன விஜய்க்கு பொருந்துகிறதோ இல்லையோ? அஜித்துக்கு மிகச்சரியாக பொருந்தி விட்டது.

ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகு அவர்களை நேரில் சந்திப்பதை அறவே தவிர்த்த அஜித் மீடியாக்களையும் கூட சந்தித்து பல வருடங்கள் ஆகி விட்டது. அதேபோல எந்த ஒரு சினிமா விழாக்களுக்கும் அவர் வருவதில்லை. அன்று எடுத்த இந்த அதிரடி முடிவுகளை இன்றுவரை தவறாமல் பின்பற்றி வருகிறார்.

இப்படி அஜித் எடுத்த முடிவால் அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உண்மையாகத் தெரிவதில்லை.

சில நேரங்களில் வரும் செய்திகள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் அவர் தரப்பில் எந்த பதிலும் வராததால் அதையும் ரசிகர்கள் நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

அப்படித்தான் இன்னொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது.

ஆரம்பம் படத்திலிருந்து வீரம், மங்காத்தா, என்னை அறிந்தால், இப்போது வேதாளம் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இறுதியாக வந்த மூன்று படங்களை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மட்டுமே தயாரித்து வருகிறார்.

இப்போது ‘வேதாளம்’ தீபாவளிக்கு ரிலீஸ் கன்பார்ம் ஆகிவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படம் என்ன? என்கிற கேள்வியும் எழுந்து விட்டது.
சிறுத்தை சிவா விலகிக் கொண்டதால் அந்த லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இயக்குநர் தயாராகி விட்டாலும் படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்களின் பட்ஜெட் பெருசு என்பதாலும் அந்தப் படங்கள் ரிலீசானால் எதிர்பார்த்த வசூலை தராததால் தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை.

அப்படி ஒரு நிலைமை ஆரம்பத்தில் ‘வேதாளம்’ படத்துக்கே கூட ஏற்பட்டது. அஜித் கால்ஷூட் கிடைத்ததும் ஆந்திராவுக்குப் போன இயக்குநர் சிறுத்தை சிவா யாராவது ஒரு தயாரிப்பாளரை பிடித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் தான் போனார். ஆனால் ரிசல்ட் பாஸிட்டீவ்வாக இல்லாததால் படம் தள்ளிப்போனது.

அதன்பிறகு தான் அஜித் சொன்னதன் பேரில் ரத்னம் தயாரிக்க முன் வந்தார்.

இப்போது அஜித்தின் அடுத்த படத்துக்கும் பட்ஜெட்டை தாங்கக் கூடிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம்.

‘தல’க்கு ஏற்பட்ட இந்த நெலைமை தலைப்பாகையோட போகட்டும்!

ajithAjith FansAjith Kumar
Comments (0)
Add Comment