ஹேர் ஸ்டைலை மாத்துங்க ‘தல’ : அஜித்தின் புது லுக்கை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

துவரை காமெடி படங்களின் ஹீரோவாக மட்டுமே இருந்த சிவகார்த்திகேயன் கூட கமல், விக்ரம் வழியில் புதிய புதிய தோற்றங்களில் நடிக்க மெனக்கிட ஆரம்பித்து விட்டார்.

குறிப்பாக அவர் நடிப்பில் விரைவில் ரிலீசாக இருக்கும் ‘ரெமோ’ படத்தில் நர்ஸ் கேரக்டருக்காக பெண் வேஷம் போட்டு கலக்கியிருக்கிறார்.

இப்படி படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்க நேற்று வந்த சிவகார்த்திகேயனே தீயாக வேலை பார்க்கிறார்.

ஆனால்,  தமிழில் முன்னணி நடிகர்களின் லிஸ்ட்டில் இருக்கும் அஜித்தோ பல படங்களாக ஒரே கெட்டப்பில் நடிக்கிறாரே..? என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை கிண்டல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் அஜித் நடித்து வரும் 57 வது படத்தின் புகைப்படங்கள் தான்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் உள்ள கரிந்தியா நகரில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையதளங்களில் லீக்காகியிருக்கிறது. அதில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இருக்கிறார் அஜித்.

‘மங்காத்தா’ படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் நடிக்க ஆரம்பித்த அஜித்கெ ளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் மட்டும் கறுப்பு தலைமுடியுடன் அஜித் தோன்றினார். இப்போது இந்த புதுப்படத்திலும் அவர் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள்  இன்னும் எத்தனை படத்துல தான் இதே கெட்டப்புல நடிப்பீங்க… தயவு செய்து லுக்கை மாத்துங்க தல… என்று கிண்டலடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ப்ளீஸ் கெட்டப்பை மாத்துங்க தல…

ajithAjithkumarAK 57ThalaThala 57
Comments (0)
Add Comment