அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான சிவகார்த்திகேயன்!

ஜீத்தோடு ரஜினி படம் மோதலாம். ஆனால் சிவகார்த்திகேயன் படம் மோதலாமா? கண்டிப்பாக மோதுவோம் என்று களத்தில் இறங்கியிருக்கிறது ‘மிஸ்டர்.லோக்கல்’ படக்குழு.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இப்படத்தை ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கியிருக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பார்ப்பதற்கு ரஜினி நடித்த ‘மன்னன்’ படத்தின் காப்பி போல இருக்கிறது என்று பரவலாக சொல்லப்பட்டு வரும் நிலையில், படத்தை வருகிற மே 1-ம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று துணிச்சலாக அறிவித்திருக்கிறார்கள்.

படத்தை ரிலீஸ் செய்வதற்கும், துணிச்சலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? மே 1-ம் தேதியன்று தான் அஜீத் பிறந்தநாளையொட்டி ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை ரிலீஸ் செய்கிறார்கள்.

ஏற்கனவே பொங்கலன்று ‘விஸ்வாசம்’ படத்தோடு ‘பேட்ட’ படமும் மோதியதால் இரு ஹீரோக்களின் ரசிகர்களும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டார்கள். அந்த சூடு ஆறுவதற்குள் இப்போது மீண்டும் அஜீத் படத்தோடு சிவகார்த்திகேயன் படம் மோதத் தயாராவதால் இரு தரப்பு ரசிகர்களும் செம டென்ஷனில் இருக்கிறார்கள்.

குறிப்பாக மே 1-ம் தேதி அஜீத் படம் வருவது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே தன் படத்தை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்வது அஜீத் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபீஸ் பஞ்சாயத்தே இன்னும் ஓயல, அதுக்குள்ள அடுத்தா?

ajithmr localPink Remakesivakarthikeyan
Comments (0)
Add Comment