சென்னையில் வெள்ளம் வந்த போது கூட வீட்டைவிட்டு வெளியே வராமல் தான் இருந்தால் அஜித். அந்தளவுக்கு தனக்கென்று ஒரு தனி வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு கடந்த சில வருடங்களாக மீடியாக்களிடமோ ரசிகர்களிடமோ தலை காட்டாமல் படங்களில் மட்டும் தல காட்டி வருகிறார்.
அவர் வெளியே வராவிட்டாலும் இன்றைக்கும் அவர் மீதான கிரேஸ் மட்டும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இதுவரை தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமான ஹீரோவாக இருந்த அஜீத் தற்போது வட இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறார்.
அதற்கு காரணம் ஹிந்தியின் வெளியான வேதாளம் திரைப்படம் தான்.
ஆமாம், அஜித் நடித்த ”வேதாளம்” படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் யு-டியூப்பில் வெளியிடப்பட்டது. படம் வெளியிடப்பட்ட நான்கே நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா?
பொதுவாக தமிழிலிருந்து ஹிந்தியில் டப் செய்யப்படும் ஒரு படத்தை யூ-ட்யூப்பில் பார்ப்பது என்பது அதிகம் நிகழ்ந்ததில்லை. அந்த சாதனையை வேதாளம் படம் செய்திருக்கிறது என்கிறார்கள். அதாவது ஒரு தமிழ் படம் ஹிந்தி டப்பிங்கை இத்தனை சீக்கிரம் 20 லட்சம் பேர் பார்த்து ரசித்தது இதுதான் முதல் தடவையாம்.
வேதாளத்துக்கு கிடைத்த இந்த வெற்றி அடுத்தடுத்து அஜித் படங்களும் ஹிந்தியில் டப் ஆக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.