ஒரு வழியாக சிவா இயக்கத்தில் தயாராகும் 57-வது படப்பிடிப்பில் நடிக்கத் தொடங்கி விட்டார் அஜித்.
படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 2-ம் தேதி பெல்கிரேட் என்ற இடத்தில் ஆரம்பித்தார் இயக்குநர் சிவா.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மட்டுமில்லாமல் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் நடிப்பது உறுதியாகி விட்டது.
காஜல் அஜித்துக்கு மனைவியாக வருகிறார். அதே சமயம் அக்ஷரா ஹாசனோ ஆக்ஷன் கலந்த கேரக்டரில் வெளுத்து வாங்கப் போகிறாராம்.
அஜித் படமென்றால் தீம் மியூசிக் இல்லாமல் இருக்குமா? அனிருத்தின் இசையில் அதுவும் இந்தப்படத்தில் கண்டிப்பாக இருக்கிறது.
பில்லாவைப் போல இதிலும் ஒரு இண்டர்நேஷனல் டிடெக்டீவ்வாக அஜித் வருவதால் 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் 30 சதவீத படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெறுகிறது.
அஜித் படம் என்றாலே அதில் ஒரு ஸ்டைலிஸ் இருக்கும். அது இந்தப் படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்பதை மட்டும் அஜித் ரசிகர்கள் முழுமையாக எதிர்பார்க்கலாம்.