வட போச்சே…! : விஜய்யை பிரிந்த பிறகு புலம்பிய அமலாபால்

ல மாதங்களாக காதலித்து திருமணம் செய்த பிறகு மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்தார் நடிகை அமலாபால்.

இருவரின் பிரிவுக்கு திருமணத்துக்குப் பிறகும் நடிப்பது என்பது தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் இருவருமே இதுவரை உண்மையான காரணத்தைக் கூறவில்லை. இயக்குநர் விஜய்யோ நம்பிக்கை தான் வாழ்க்கையில் முக்கியம் என்று பட்டும் படாமலும் விளக்கம் கொடுத்தார்.

முறைப்படி விவாகரத்துக்காக நீதிமன்றப்படியேறி விட்டதால் இருவருமே தனித்தனியாக தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘வட சென்னை’ உட்பட பல புதிய படங்களில் அமலாபால் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

என்னதான் இப்போதும் பட வாய்ப்புகள் வந்தாலும் தான் இப்போதும் இயக்குநர் விஜய்யை காதலிப்பதாக பரபரப்பான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :

”யாருமே பிரிவதற்காக திருமணம் செய்வதில்லை. அது போல தான் நானும். திருமண வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் தான் பிரிந்தேன். 18 வயதில் சினிமாவிற்கு வந்தேன். 23 வயதில் திருமணம். மிகவும் சிறிய வயது. 24 இல் பிரிவு. விஜய்யை என்னால் மறக்க முடியாது.

அவரை பிரிந்தபோது மிகவும் அழுதேன். மிகவும் கடுமையான பிரிவு. அப்போது தான் வாழ்க்கை என்பது என்ன என்று தெரிந்தது. அவரை இன்னும் காதலிக்கிறேன். எப்போதும் காதலிப்பேன். பிரிவது கூட காதல் தான் அவர் என வாழ்வின் மிக முக்கியமான நபர். பிரிவிற்கு பிறகு படங்களுக்காக பல இடங்களுக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு அனுபவமும் புதியதாக இருந்தது. அது தான் என்னை வாழ்க்கை பற்றி புரிய வைத்தது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்” அமலாபால்.

Amala PaulAmala Paul DivorceDirector Vijayvijay
Comments (0)
Add Comment