‘ஆபத்தான நடிகைகள்’ லிஸ்ட்டில் அமலாபால்!!!

திருமணத்துக்குப் பிறகு ‘பசங்க – 2’ படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கத் தயாராகி வருகிறார் அமலாபால்.

தன்னுடைய ரீ-எண்ட்ரியை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ? என்று டென்ஷனோடு காத்திருக்கும் இந்த நேரத்திலா அப்படி ஒரு ஆய்வின் முடிவு வர வேண்டும்?

என்ன ஆய்வு?

‘வருடாந்திர செக்யூரிட்டி ஆய்வு 2015’ ஒன்றை பிரபல மென்பொருள் நிறுவனமான இன்டெல் நடத்தியிருக்கிறது. இந்த இணையதள ஆய்வின் முடிவில் அமலாபால் ஆபத்தான நடிகையாக கண்டறியப்பட்டிருக்கிறார்.

ஆமாம், நீங்கள் அமலாபாலின் அழகான புகைப்படத்தை இண்டர்நெட்டில் கிளிக் செய்து பார்த்தாலோ? அல்லது தரவிறக்கம் செய்தாலோ? ஜாக்கிரதையாக இருங்கள்,

ஏனென்றால் அவருடைய போட்டோக்களின் பின்னணியில் தான் ஹேக்கர்கள் க்யூ கட்டி நிற்பார்களாம். நீங்கள் போட்டோக்களை ரசித்துக் கொண்டிருக்கும் போதே ஹேக்கர்கள் உங்கள் அக்கவுண்ட்டில் எல்லா விபரங்களையும் எடுத்து விடுவார்கள். அல்லது அக்கவுண்ட்டையே காலி செய்து விடுவார்களாம்.

இவரைப் போலவே இந்த லிஸ்ட்டில் பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனானும் இருக்கிறார்.

வெரி வெரி டேஞ்சரஸ் கேர்ள்!!!

Amala Paulஅமலாபால்
Comments (0)
Add Comment