யாருக்கும் தெரியாமல் திகட்ட திகட்ட காதலித்து எல்லோர் முன்னிலையிலும் ஊரறிய நடிகை அமலாபாலை திருமணம் செய்தார் இயக்குநர் விஜய்.
மண வாழ்க்கை ஒரு வருடத்தைக் கூட தாண்டாத நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரின் விவாகரத்து விவகாரமும் நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.
திருமணத்துக்குப் பிறகு அமலாபாலுக்கு தொடர்ந்து நடிக்கிற வாய்ப்பு வந்ததால் தான் அமலாபால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல தனுஷின் வட சென்னை படத்தின் மூன்று பாகத்திலும் கமிட்டானார். இப்போது அந்த ஒருபடம் மட்டுமே கை வசம் உள்ள நிலையில் புதுப்பட வாய்ப்புகள் அமலாபாலுக்கு வந்தபாடில்லை.
இதனால் சந்திரிகா சோப் விளம்பரம் உள்ளிட்ட வருகிற எல்லா வாய்ப்புகளையும் வளைத்துப் போட்டு வருகிறார். எதிர்பார்த்த படங்கள் கைவசம் இல்லாததால் பொழுது போகாத அமலாபால் தனது தோழிகளுடன் ஊர் சுற்றி வருகிறார்.
மும்பை, காஷ்மீர் என பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது தான் அமலாபாலின் தற்போதையை வேலையாக இருக்கிறது.
யாராவது சான்ஸ் இருந்தா கொடுங்கப்பா…