‘அடல்ஸ் ஒன்லி’ படமெடுக்கிறாரா அதர்வா? : சந்தேகத்தை கிளப்பிய கமிட்மெண்ட்

‘செம போத ஆகாத’

இப்படி ஒரு டைட்டிலில் தயாராகி வரும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் நடிகர் அதர்வா.

அதர்வாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பத்ரி வெங்கடேஷ் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் இது ஏதாவது ஏடாகூடமான படமாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டுக்கொண்டிருக்க,

அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக இன்னொரு சமாச்சாரமும் இதில் அரங்கேறியிருக்கிறது.

ஆமாம், இந்தப் படத்தில் ராம்கோபால் வர்மாவின் ‘நான் தாண்டா’, வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த அனைகா சேத்தியை பாலியல் தொழிலாளியாக நடிக்க கமிட்மெண்ட் செய்திருக்கிறார்களாம்.

அனைகா சேத்தியின் கவர்ச்சிகரமான உடல்வாகுக்கு கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை இந்தப் படத்தில் கமிட் செய்தோம் என்கிறார் இயக்குநர் பத்ரி.

படத்தோட பேரு ‘செம போத ஆகாத’. அனைகா சேதிக்கு படத்துல பாலியல் தொழிலாளி கேரக்டர்.

அப்போ இது ‘அடல்ஸ் ஒன்லி’ படமான்னு சந்தேகம் வரத்தானே செய்யும்..!

Anaika SotiAtharvaaSema Potha Agatha
Comments (0)
Add Comment