இஸ்பேட் ராஜா, இதய ராணிக்காக பாடிய அனிருத்!

கேட்டவுடன் சக இசையமைப்பாளர்களின் இசையில் நட்புக்காக பாடிக்கொடுப்பதை எந்தவித பந்தாவும் இல்லாமல் செய்து வரும் ஒருவர் இளம் இசையமைப்பாளர் அனிருத்.

அந்த வரிசையில் தற்போது “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்துக்காக ‘கண்ணம்மா’ என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்.

படக்குழுவினர் நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனிருத்தை அணுகியிருக்கிறார்கள். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த பிடிவாதமான காதல் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் ஜோடியாக நடிக்க, நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பால சரவணன் காமெடியில் கலக்குகிறார்கள்.

இந்த அழகான காதல் கதையை “புரியாத புதிர்” புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க, மாதவ் மீடியா சார்பில் ல் பாலாஜி கப்பா தயாரித்திருக்கிறார்.

Anirudhispade raajavum idhaya raniyum
Comments (0)
Add Comment