அடடே… அனிருத்துக்கும் ஒரு காதலி இருக்கிறார்! : அம்பலப்படுத்தினார் சமந்தா!

 

நாலு கால் பாய்ச்சலில் வீட்டை விட்டு வெளியே போனால், நாலெட்டு பிரச்சனைகளோடு தான் திரும்ப வருகிறார் அனிருத்

அப்படிப்பட்டவருக்கு ஒரு கால் கட்டு போட்டு விட்டால் அடங்கி விடுவாரென்று குடும்பத்தார் முடிவு செய்ததையடுத்து அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வருவதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அப்படி வந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை, ”நிச்சயம்? எனக்கா? ஹாஹாஹாஹாஹா…” நான் சிங்கிள் மற்றும் யங்கு என்று திருமண நிச்சயதார்த்தம் என்று மறுத்திருக்கிறார் அனிருத்.

அப்படி அவர் சிங்கிள் என்று கருத்து சொன்னதை பிடித்துக் கொண்ட நடிகை சமந்தா

”ஆனால் அந்த பெண் ரொம்ப நல்லவள்.. என்ன நடந்தது?” என கேட்டுள்ளார்.

அனிருத்திடம் சமந்தா கேட்டுள்ள இந்த கேள்வியால் யாருப்பா அந்த பெண், என்ன நடந்தது என்று அனிருத்தின் ரசிகர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அனிருத்தோ அதுபற்றி வாயே திறக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஆண்ட்ரியாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு பீப் சாங் விவகாரத்திலும் அனிருத் பெயர் அடிபட்டது. இந்த நிலையில் நடிகை சமந்தா திடீரென்று யார் அந்தப் பெண் என்கிற டவுட்டை கிளப்பி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

AnirudhAnirudh EngagementSamantha
Comments (0)
Add Comment