ஏற்கனவே தான் இசையமைத்த படங்களிலும், சில ஆல்பங்களிலும் தலை காட்டியிருக்கும் அவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டனர்.
தன்னை துரத்தும் அவர்களிடம் ”எனக்கு நடிகராகும் ஆசையில்லை” என்று சொல்லி வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார்.
இப்படி நடிப்பென்றாலே ஓடி ஒளிந்து கொண்டிருந்த அனிருத்தை ஆளே அடையாளம் தெரியாதபடி அச்சு அசல் ஒரு அழகான இளம் பெண்ணாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஒருவர்.
அனிருத் இளம் பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதைப்பார்க்கும் அத்தனை பேரும் ”அட நம்ம அனிருத் தம்பியா இது?” என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள்.
படங்களில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வந்த அனிருத்தை நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக இயக்குனர் நெல்சன் ஒரு முக்கியமான கேரக்டரில் அனிருத்தை நடிக்க வைத்திருக்கிறாராம்.
வெறுமனே சும்மா வந்து போகிற கேரக்டராக இல்லாமல் நயன்தாராவுக்கு ஜோடியாக வரும் கேரக்டர் என்பதால் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து வந்த அனிருத் தனது கொள்கையை தளர்த்தி நடித்திருக்கிறார். அந்தக் கேரக்டருக்கான கெட்டப் தான் இது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!