சிம்பு பாட… அனிருத் வெளியிட… : ஒரே கொண்டாட்டம் தான் போங்க!

ம்புட்டுத்தான் இனிமே ஒண்ணு சேர்றதுக்கு வாய்ப்பே இல்லை என்கிற ரீதியில் தான் சிம்பு – அனிருத்தைப் பற்றி கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தளவுக்கு ஒரே ஒரு பீப் சாங் லீக்கானதில் இருவருடைய பெயரும் எந்தளவுக்கு டேமேஜ் ஆக முடியுமோ அந்தளவுக்கு ஆகிக் கிடக்கிறது.

அதிலும் இந்த விவகாரத்தில் தொழில் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டது அனிருத் தான்.

எனக்கும் அந்த பீப் சாங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சத்தியம் செய்ய முன் வந்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

அவ்வளவு ஏன்?

அவரது அறிமுகத்துக்கு காரணமான தனுஷே விஷயத்தை கேள்விப்பட்ட அடுத்த நொடி தனது புதுப்படங்களில் அனிருத்தை தூக்கி விட்டு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டார்.

சிம்புவுக்கு சும்மாவே வாய்ப்புகள் வருவதில்லை. இதில் பீப் சாங் வேறு சேர்ந்து கொண்டதால் அடக்கித்தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கொஞ்சம் விட்டிருந்தால் சிம்புவும், அனிருத்தும் ஒரு படத்திலாவது இணைந்திருப்பார்கள். ஆனால் பீப் சாங் விவகாரம் சூடு பிடிக்கவே அந்த எண்ணத்தை மாற்றி விட்டு இருவருமே தத்தம் பாதையில் பயணத்தை தொடர்ந்தனர்.

இப்போது பீப் சாங்கின் வீரியம் குறைந்த நிலையில் மேற்படி இருவரும் ஒரு பாடலில் இணைந்திருக்கிறார்கள்.

நீங்கள் நினைக்கிற மாதிரி இதென்ன இன்னொரு பீப் சாங்க்கா என்று கேட்டு விட வேண்டாம்.

இது தொழில் ரீதியானது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரிக்க கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஷாமிலி நடித்து வரும் படம் ”வீரசிவாஜி”.

இப்படத்திற்காக இமான் இசையில் சிம்பு “தாறு மாறு தக்காளி சோறு’’ என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக் பாடலைத்தான் இன்று இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். ஆனா நாங்க தான் குற்றமே செய்யலையே என்பது தான் சிம்பு – அனிருத்தின் வாதம்.

இளம் ரத்தம் கொஞ்சம் விட்டுத்தான் புடிங்களேன்…

AniruthShamiliSimbuVeera SivajiVikram Prabhuஅனிருத்சிம்புவிக்ரம் பிரபுவீர சிவாஜி
Comments (0)
Add Comment