அது பரத நாட்டியம் இல்லை; பரிதாப நாட்டியம்! : ஐஸ்வர்யா தனுஷை காரித் துப்பிய பிரபலம்!

ப்படி ஒரு அவமானம் தேவையா? என்று ஊர் உலகமே காரித்துப்புகிற அளவுக்கு நாறிக்கிடக்கிறது தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் பெயர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐநா சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா தனுஷ்.

இதனால் உலக மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8-ம் தேதி ஐ. நா தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம் அரங்கேற்ற வாய்ப்பு கிடைத்தது. நல்லெண்ண தூதர் என்பதையும் தாண்டி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தால் கிடைத்த அரிய வாய்ப்பு அது.

அனிதா ரத்னம்

ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடியோ ஆட்டத்தை பார்த்தவர்கள் இன்று வரை அந்த மிரட்சியிலிருந்து மீண்டு வரவில்லை.

அவர் ஆடிய ஆட்டத்தின் வீடியோ வெளியானதும் களத்தில் இறங்கிய நெட்டிஷன்கள் செம கலாய் கலாய்த்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சாதாரண மக்களே இந்தளவுக்கு திட்டித் தீர்க்கிறார்கள் என்றால் பரத நாட்டியமே உயிர் மூச்சாகக் கொண்ட கலைஞர்களின் வாயை அடைக்க முடியுமா?

”ரஜினியின் மகளாச்சே” என்று நடிகை ஷோபனா உள்ளிட்ட பரத நாட்டியக் கலைஞர்கள் பலரும் இந்த விஷயத்தில் எந்த எதிர்க் கருத்தும் சொல்லாமல் அடக்கி வாசிக்க, பிரபல பரத நாட்டியக் கலைஞரான அனிதா ரத்னத்தினாலோ ஐஸ்வர்யா ஆடிய ஆட்டத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

“ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல. பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகி விட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று கடுப்பாக விமர்சித்துள்ளார்.

இதையெல்லாம் சட்டை செய்கிற குடும்பமா ரஜினி குடும்பம்?

Aishwaryaa DhanushAnita RatnamAnita Ratnam SlamsBharatanatyam
Comments (0)
Add Comment