‘ஆண்ட்டி லுக்’ விளம்பரத்தால் வாய்ப்புகளை இழக்கும் அஞ்சலி!

தெலுங்கில் டிக்டேட்டர், சங்கராந்தி என இரண்டு மெகா ஹிட் படங்களைக் கொடுத்த பிறகு கைவசம் ஒரே ஒரு பேய் படத்தை மட்டும் வைத்திருக்கிறார் அஞ்சலி.

அதேபோல தமிழிலும் நல்ல நல்ல பட வாய்ப்புகளை வைத்திருந்த அஞ்சலி வசம் இப்போதைக்கு ஜெய் ஜோடியாக நடிக்கும் படம் மட்டுமே இருக்கிறது.

நன்றாகப் போய்க்கொண்டிருந்த அஞ்சலியின் மார்க்கெட் இப்படி கலவரமாகிக் கிடக்க ஒரே ஒரு விளம்பரப் படம் தான் காரணமாம்.

பொதுவாக பெரிய திரையில் தோன்றும் நடிகைகள் விளம்பரப் படங்களில் தோன்றினாலும் அவர்களது மார்க்கெட் இறங்காது. அஞ்சலி ஜவுளிக்கடை விளம்பரமெல்லாம் நடித்த போது மார்க்கெட் ஒன்றும் ஆகவில்லை.

ஆனால் இப்போது நடித்திருக்கும் ஒரு கிச்சன் பாத்திரங்களின் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரம் அவருக்கு வேறு ஒரு இமேஜை ரசிகர்கள் மத்தியில் கொடுத்திருக்கிறது.

ஆமாம், மேற்படி விளம்பரப் படத்தில் அஞ்சலி ‘ஆண்ட்டி லுக்’கில் காட்சியளிப்பதால் இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் அஞ்சலியுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்களாம்.

ஒரு பாடலுக்கு நடனம், படங்களில் நாயகி என பொறுப்பாக போய்க் கொண்டிருந்தவரை இனிமே ஆண்ட்டி, அக்கா கேரக்டர்களில் நடிக்கக் கூப்பிட்டால் என்னாவது?

அஞ்சலி தான் யோசிக்கணும்!

Anjaliஅஞ்சலி
Comments (0)
Add Comment