‘அண்ணாதுரை’யை தேடி வந்த லயோலா கல்லூரி இளவரசி!

ருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் “அண்ணா துரை” படத்தின் டைட்டிலில் துவங்கி, எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘ஜிஎஸ்டி’ பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்ட பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் வீடியோவைப் பார்த்தவர்கள் அத்தனை பேரும் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர்.

சென்னையில் லயோலா கல்லூரியில் படித்து வரும் சம்பிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக கதாநாயகர்களை வழங்கி கொண்டு இருக்கும் அந்த கல்லூரியில் இருந்து வரும் முதல் கதாநாயகி டயானா என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விளம்பர மாடலாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த இவர் “அண்ணாதுரை” படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாத்திமா விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்தது. பிறகு ஆடிஷன் மூலம் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

“சம்பிகா என்றால் இளவரசி” என்று அர்த்தம். நான் அப்படித்தான் வாழ விரும்புகிறேன். என்னை கதாநாயகியாக தேர்ந்து எடுத்த பாத்திமா விஜய் ஆண்டனிக்கும், எனக்கும் நடிப்பில் ஏற்படும் சிறு சந்தேகங்களை கூட பொறுமையாக விளக்கி சொல்லும் விஜய் ஆண்டனி சார் ஆகியோரை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்.

விஜய் ஆண்டனி சார் படங்கள் என்றாலே அது அனைத்து ரசிகர்களை கவரும் படம் என்பதால் படத்தின் வெளியீட்டை பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ரேவதி. பெயர் ராசியோ என்னவோ படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் ஸ்ரீனிவாசன் முக்கிய காரணம். இயல்பாக நடிக்க வேண்டும் என்பதில் மிகமிக தெளிவாக இருந்தார்.

ஸ்ரீதேவி மேடம் போல ஸ்டைலாகவும், நயன்தாரா மேடம் போல திரை ஆளுமையுடனும், த்ரிஷா மேடம் போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா பச்சன் போல அனைவரையும் கவரும் வண்ணம் போல திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை, அது நிச்சயம் நிறைவேறும். நவம்பர் 30 ஆம் தேதி வெளி வரும் “அண்ணாதுரை” எனக்கு மிக பெரிய வாழ்வை தரும்”என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் டயானா சம்பிகா.

Actress Diana ChampikaAnnaduraiDiana ChampikaVijay Antony
Comments (0)
Add Comment