ஹிந்தியில் ‘அகிரா’வை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாரை வைத்து இயக்குவார்? என்கிற குழப்பமான கேள்விக்கு உறுதியான பதில் கிடைத்து விட்டது.
விஜய் தான் அடுத்த பட ஹீரோவாக இருப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரோ பரதனுக்கு கால்ஷுட் கொடுத்து விட்டார். முருகதாஸோ சைலண்ட்டாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து இயக்கத் தயாராகி விட்டார்.
சமீபகாலமாக தெலுங்கு ஹீரோக்கள் நடிக்கின்ற படங்களில் தமிழில் ஹிட்டாவதைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இருமொழிப்படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இரு மொழிப்படமென்றால் பட்ஜெட் பெருசாக இருக்குமே? ஆமாம் ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை இயக்கிய படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படப்போகிற படமாம். முன்னதாக பட்ஜெட் இவ்வளவு ஆகுமென்று தயாரிப்பாளருக்கு முருகதாஸ் தகவல் சொல்லவும் அதனாலென்ன உங்களை நம்பி தாராளமாக செலவு பண்ணலாம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.
வருகிற ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஆரம்பிக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்குகிறது.
2017ம் ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக ரிலீசாகப் போகிறது.
சரி பட்ஜெட் எவ்வளவு என்று சொல்லவில்லையே?
அதிகமில்லை, 90 கோடி தான்!