அருண்விஜய்யின் புதியபடம் துவங்கியது


குற்றம்23 படத்திற்கு பின் இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

ArivazhaganArunvijaynewmovie
Comments (0)
Add Comment