சூர்யா ஹரியின் ஆறாவது அருவா


அருவா இல்லாமல் ஹரி படம் இருக்காது. இப்போது அருவா என்ற டைட்டிலிலே ஒருபடம் தயாராகவுள்ளது.

இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்காகி, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் பெரு வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம். சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கி , ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்தார். தற்போது இந்தக்கூட்டணி “அருவா“ திரைப்படத்துக்காக மீண்டும் இணைகிறது.

தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் K .E .ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “அருவா“ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 39வது படமான இது இயக்குனர் ஹரிக்கு 16வது படம், சூர்யாவும் இயக்குனர் ஹரியும் இணையும் 6வது படமாகும்.

aruvaAruvaaHariSuriya
Comments (0)
Add Comment