‘அருவி’ இயக்குனரின் அடுத்த படம்

டுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார் ‘அருவி’ இயக்குனர் அருண் புருஷோத்தமன்.

‘வாழ்’ என்கிற தலைப்புடன் தயாராகும் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாராக்கும் மூன்றாவது படமிது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய பிரதீப் குமார் இசையமைக்க இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், குட்டி ரேவதி ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளர் பிரதீப் குமாரும் பாடலை எழுதுகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் நாயகன், நாயகி மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Arun PrabhuMovie NewsVaazhl
Comments (0)
Add Comment