‘தனி ஒருவன்’ படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’, மற்றும் ‘சதுரங்க வேட்டை 2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இப்படத்தை “என்னமோ நடக்குது” “அச்சமின்றி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்குகிறார்.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.