அரவிந்த்சாமியுடன் ஜோடி போடும் ரித்திகா சிங் – நந்திதா

ஜீவன் நடிப்பில் ‘நான் அவனில்லை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுப்படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் செல்வா.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் “மேஜிக் பாக்ஸ் புரொடக்‌ஷன் நம்பர் 3’’ யாக தயாராகும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி, கலை சிவா யாதவ் கவனிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Arvind SwamyDirector SelvaMagic BoxRithika Singh
Comments (0)
Add Comment