தமிழில் செட்டாகல… : கேரளாவுக்கு மூட்டையைக் கட்டினார் ஆர்யா!

சில வருடங்களாக கோலிவுட்டின் ப்ளாபாய் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட ஆர்யா என்று கரெக்ட்டாகச் சொல்லி விடும்.

அந்தளவுக்கு மவுசு உள்ள ஹீரோவாக இருந்த ஆர்யாவுக்கு இறுதியாக வந்த சில படங்கள் அடுத்தடுத்து அடி வாங்கி தமிழில் அவரது பெத்த மார்க்கெட்டையே ஆட்டம் காண வைத்து விட்டது.

போதாக்குறைக்கு சொந்தப்படமும் எடுத்து பல கோடிகளை இழந்தவருக்கு இப்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் படி படங்கள் இல்லை.

தமிழில் வாய்ப்பில்லாததால் தனது சொந்த மாநிலமான கேரளாவில் டேரா போட்டிருக்கும் ஆர்யா அங்கு ப்ரிதீவிராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஆர்யா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க சம்மதித்ததோடு அந்தப்படத்தின் ஒரு தயாரிப்பாளராகவும் பங்களிப்பு செய்கிறார்.

தமிழில் தற்போது கடம்பன் என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் ஆர்யா விரைவில் அமீர் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தை தயாரித்து நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

AryaPrithviraj
Comments (0)
Add Comment