ரஜினியும் தலைவர் தான்! : நாசரை நெளிய வைத்த ஆர்யா

கூட இருப்பவர்களை நேரம் பார்த்து கலாய்ப்பதில் ஆர்யா கை தேர்ந்தவர். அப்படித்தான் இன்று காலை ‘இஞ்சி இடுப்பழகி’ ஆடியோ பங்ஷனிலும் மூத்த நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான நாசரை கலாய்த்தார்.

விழாவில் பேசிய ஆர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த குண்டு ஆர்த்தியை ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் இருந்து ஆர்த்தியை எனக்குத் தெரியும். அவங்க குண்டா இருந்தாலும் எப்பவுமே ஆக்ட்டீவ்வா இருப்பாங்க. என்னைப் பொருத்தவரை அவங்க தான் அழகு! என்று பாராட்டி விட்டு நாசருக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது எங்கத் தலைவர் நாசர் என்று சிரித்தவர் ‘தலைவர்’னு சொன்னா யாருன்னே தெரிய மாட்டேங்குது? ரஜினியையும் தலைவர்ன்னு தான் சொல்றோம். இப்போ உங்களையும் தலைவர்னு தான் சொல்றோம்…இதுலேயே பெரிய குழப்பமா இருக்கு என்று பேசிவிட்டு அமர்ந்தார்.

என்ன தான் சக நடிகராக இருந்தாலும் இப்படியா ரஜினியோடு நாசரை ஒப்பிட்டு சங்கடத்தைக் கொடுப்பது?

AryaInji IduppazhagiNassar
Comments (0)
Add Comment