தனித் தீவில் உற்சாகம், குஷி, கொண்டாட்டம் : வாழ்ந்தா அசினைப் போல வாழணும்!

ஸ்கெட்ச் போட்டு வசதியான ஆட்களை தூக்குவதில் நடிகைகளுக்கு நிகர் அவர்களே தான்.

தமிழில் தேறுவாரா மாட்டாரா? என்கிற தொங்கல் நிலையில் இருந்த அசின் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த வாய்ப்பினால் ஹிந்திக்கு போனார்.

ஹிந்தி கஜினி ஹிட்டாகவும் தொடர்ந்து அங்கேயே தங்கி ஹிந்திப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் அப்படியே மைக்ரோ மேக்ஸ் ஓனர் ராகுல் சர்மாவையும் சந்தடி கேப்பில் ரகசியமாக காதலித்து வந்தார்.

இருவருடைய காதலுக்கும் வீட்டில் பச்சைக்கொடி காட்டியதையடுத்து திருமணம் செய்து ராகுல் சர்மாவுடன் குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.

ஹிந்திக்குப் போக முக்கிய காரண கர்த்தாவான ஏ.ஆர்.முருகதாஸையோ அவருடன் கஜினியில் ஜோடி சேர்ந்து நடித்த சூர்யாவையோ தனது திருமணத்துக்கு அழைக்கவில்லை என்கிற சர்ச்சை ஏற்கனவே இருந்து வரும் நிலையில் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது தொழிலதிபர் காதலருடன் தனித் தீவுக்கு ஹனிமூனை கொண்டாடி விட்டு வந்திருக்கிறாராம்.

எந்த தீவு, எத்தனை நாட்கள் ஆகிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இருவரும் யாருடைய தொந்தரவும் இல்லாமல் சமைப்பதற்கு ஒருவரை கூடவே அழைத்துச் சென்று காதலர் தினத்தை முழுமையாக கொண்டாடி திளைத்தார்களாம்.

வாழ்ந்தா அசின் மாதிரி ப்ளான் போட்டு வாழணும்! கரெக்ட் தானே சேச்சி..?

Asin - Ragul SarmaValentine's Dayஅசின்காதலர் தினம்ராகுல் சர்மா
Comments (0)
Add Comment