வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது.
அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாகி வரும் முழு நீள திரைப்படம் “அவிரா ”
சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன். இவர்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்ற பெருமை இயக்குனர் பிரபாகரனையே சேரும். இதன் தயாரிப்பாளர்களாக கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.