‘100 கோடி’ கிளப்பில் பைரவா! : மீண்டும் வசூல் தளபதி ஆனார் விஜய்!

டந்த சில வருடங்களாகவே ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ இடம் யாருக்கு என்கிற போட்டியில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்குமிடையே பெரும் கருத்து மோதல் உருவாகி வருகிறது.

குறிப்பாக அஜித் படம் ரிலீசானால் விஜய் ரசிகர்கள் அதற்கு எதிராக கருத்துகளை பரப்புவதும், விஜய் படம் ரிலீசானால் அஜித் ரசிகர்கள் அந்தப்படத்துக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது.

அது இந்த பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் ”பைரவா” படத்துக்கும் நடந்தது. ஆமாம், பைரவா ரிலீசான முதல் நாளே அதன் வசூலை கெடுக்கும் விதமாக “BairavaaFlobCelebration” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்தார்கள் அஜித் ரசிகர்கள்.

ஆனால் அதையும் மீறி படம் கமர்ஷியலாகவும், நல்ல மெசேஜ் உள்ள படமாகவும் இருந்ததால் ரிலீசான முதல் நாளிலேயே 16.61 கோடி ரூபாயை வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்திருக்கிறது. இந்த வசூல் கணக்கை அப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதோடு படத்தின் நீளத்தை குறைக்கச் சொல்லி ரசிகர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து 8 நிமிட காட்சிகளையும் குறைக்கப்பட்டிருப்பதால். படத்தில் விறுவிறுப்பு இன்னும் அதிகரித்திருப்பதாகவும், ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவதாகவும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பைரவா படத்தைப் பற்றி வெவ்வேறான வசூல் தகவல்கள் வெளிவந்தாலும் அப்படத்தை திரையிட்டிருக்கும் திருநெல்வேலி ராம் சினிமா தியேட்டர் “முதல் நான்கு நாட்கள் ‘பைரவா’ வசூலே இதுவரை எங்கள் ரிலீசில் அதிக வருவாயைத் தந்துள்ளது. நாங்கள் நல்ல லாபத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. அதே போல சென்னை குரோம்பேட்டை ராக்கி தியேட்டரும் ”பைரவா படம் எங்கள் தியேட்டரில் முதல் வார வசூலில் மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இதுபோக அண்டை மாநிலமான கேரளா மற்றும் யு.கே. பிரான்ஸ், மலேசியா, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் ரிலீசான எல்லா தியேட்டர்களிலும் பைரவா வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் முதல் மூன்று நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 86 கோடி ரூபாயை வசூல் செய்த பைரவா நான்கே நாட்களில் 100 கோடியை வசூல் செய்து 100CroreClub இல் சேர்ந்திருக்கிறது.

பைரவாவின் இந்த வசூல் சாதனை அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் வசூலை முறியடித்திருப்பதால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள். அதோடு இந்த பிரம்மாண்ட வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் பரதனுக்கும் மறக்காமல் மாலை அணிவித்து மரியாதை செய்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

BairavaaBairavaa Record BreakBox Office CollectionIlayathalapathyvijay
Comments (0)
Add Comment