நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்த தயாரிப்பாளர்-வெயிலோன் பேச்சு!

பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர் களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது.இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார்.
இப்படம் பத்திரிகை, மீடியா நிருபர்களுக்கு இன்று திரையிடப்பட்டு அவர்களது பாராட்டை பெற்றது.
பின்னர் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பேசினர்.

இவ்விழாவினில் கதை, வசனகர்த்தா வெயிலோன் பேசும் போது,

இயக்குனர் வெங்கட் புவன் நானும் நண்பர்கள். தமிழர்கள் வரலாறு நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து இக்கதை அமைக்கப்பட்டது. இது சொல்லப்பட வேண்டிய கதை என்று தயாரிப்பா ளரும் சொன்னார். குருசோமசுந்தரம், மாஸ்டர் ஶ்ரீதர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ளனர். குறிப்பாக மறைந்த நிதிஷ் வீரா இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. அவர் அவ்வளவு சிரத்தை எடுத்து இதில் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் முக்கிய பாத்திரம் நடித்தி ருக்கிறார். கிணற்றில் குதித்து நீச்சல் காட்சி யில் நடிக்க வேண்டும் என்றபோது உடனே நடிக்கிறேன் என்றார். ஆழமான கிணற்றில் குதிக்க தயாராக இருந்த வரிடம் சென்று உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்ட போது தெரியாது என்றார். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நடிப்புக்காக உயிரை பணயம் வைக்கிறாரே என்று ஷாக் ஆகி.பிறகு அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து நீச்சல் காட்சியில் நடிக்க சொன்னோம். அவர் டைவ் அடித்து குதித்த பிறகு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அவரை கிணற்றில் குதித்து காப்பாற்றினார்கள்” என்றார்.

Actor Guru SomasundaramActress DurgaBell movieSridharmaster