கொஞ்ச காலத்துக்கு வாயை திறக்க மாட்டேன்! : மீடியாக்களை தவிர்க்கும் பாரதிராஜா!

வேல ராமமூர்த்தி – ரத்னகுமார் என்கிற இரண்டு எழுத்தாளர்களின் ‘குமுதம்’ வார இதழ் கருத்து மோதல் தமிழ்சினிமாவால் தவிர்க்க முடியாத இரண்டு பெரும் இயக்குநர்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கி விட்டிருக்கிறது.

”எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மீறி பாரதிராஜாவும் அந்த ரத்னகுமார் என்பவனும் பேசி வருகிறார்கள். இதற்கப்புறமும் நான் வாய் திறந்து பேசா விட்டால் என்னை எங்கள் ஊரில் சொல்வது போல ‘மழுமட்டை’ என்று நினைத்து விடுவார்கள். அதனால் தான் இன்று உங்களை சந்தித்து இந்த விளக்கத்தையும், எச்சரிக்கையும் சொல்கிறேன்” என்றார் இயக்குநர் பாலா.

சென்ற வார குமுதம் இதழில் வேல ராமமூர்த்தி பாரதிராஜாவைப் பற்றி கொஞ்சம் வார்த்தைகளை விட்டு விட, அதற்கு பதிலடியாக கொஞ்சம் ஓவராகவே அதே குமுதம் இந்த வார இதழில் பாலாவுக்கு கதைத் திருடன் என்று பட்டம் கட்டி பேட்டி கொடுத்திருந்தார் கதையாசிரியர் ரத்னகுமார்.

இதனால் கொந்தளித்த பாலா நேற்று மாலை அவசரமாக மீடியாக்களை சந்தித்து ‘குற்றப்பரம்பரை’ விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன? இனி நடக்கப் போவது என்ன? போன்ற விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். முடிவில் பாரதிராஜாவும், ரத்னகுமாரும் என்னைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சரி நேற்று பாலா கொடுத்த பரபரப்புக்கு கண்டிப்பாக பாரதிராஜா பதிலடி கொடுப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ”பாயும் புலி பதுங்கும் பூனை”யான கதையாகி விட்டது பாரதிராஜா எடுத்திருக்கும் திடீர் முடிவு.

நேற்று பாலா பேட்டி முடியவும் பதில் கருத்தை தெரிந்து கொள்ள சில நிருபர்கள் பாரதிராஜாவுக்கு போனைப் போட்டிருக்கிறார்கள்.

அப்போது பதிலளித்த பாரதிராஜா ”ரத்னகுமார் கொடுத்த பேட்டியால எனக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கு. அதனால இனி கொஞ்ச காலத்துக்கு நான் மீடியாக்களிடம் வாயே திறக்கப் போவதில்லை. இன்னும் மூணு மாசம் கழிச்சி தான் பேசுவேன். அப்போ கூட படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். யாரும் பேட்டி என்று என்னிடம் வராதீர்கள், டோண்ட் டிஸ்டர்ப் மீ” என்று கூறி  போனை துண்டித்து விட்டாராம்.

பெரிய மனுஷனுக்கு அழகே எதையும் தைரியமா எதிர்கொள்றது தானே..?

BharathirajaDirector BalaKutra Parambaraiகுற்றப்பரம்பரைபாரதிராஜாபாலா
Comments (0)
Add Comment