பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் டிரைலர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பெடியா டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரம்மியமான காடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது. இந்த நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமான முறையில் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன. டிரைலரில் வருண், கீர்த்தி, தீபக் தோப்ரியல் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.நவம்பர் 25 அன்று பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
#Bhediya #பெடியா