கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? – டிவியில் சம்பாதிப்பதற்காக காதலரை கை கழுவிய ஜூலி!

மெரீனாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துணிச்சம் முகம் காட்டியவர் ஜூலி.

அவரின் உண்மையான முகம் எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது விஜய் டிவியின் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களில் ரசிகர்களால் அதிகம் கழுவி ஊற்றப்பட்டவர் ஜூலி தான். அந்தளவுக்கு அவருடைய நடத்தைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் ஜீலி மீதான இமேஜ் ரசிகர்களிடம் மாறவே இல்லை. ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ஜூலி சின்னத்திரையில் சம்பாதிக்க எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து முயற்சி செய்தார்.

அவருடைய தேடலுக்கு முதல் ஆளாக புகழிடம் கொடுத்திருப்பவர் டான்ஸ் மாஸ்டர் கலா.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலிக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஏற்பாட்டை முன் நின்று செய்தவர் கலா மாஸ்டர் தானாம்.

கலா மாஸ்டர் காயத்ரி ரகுராமுக்கு உறவினராக இருந்தாலும் தன் மீது அவர் காட்டும் அக்கறையைப் பார்த்த ஜூலி இப்போதெல்லாம் அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் செய்கிறாராம்.

அப்படித்தான் தனக்கு நடக்க இருந்த திருமணத்தையும் நிறுத்தியிருக்கிறார் ஜூலி. தான் காதலித்து வந்த ஒருவரை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார் ஜூலி. ஆனால் இது சம்பாதிக்கும் நேரம், இந்த நேரத்தில் எதற்கு திருமணம்? என்று அவருக்கு அட்வைஸ் வர, அவர் சொல்படியே தனது காதலரை கை கழுவி விட்டு விட்டு சின்னத்திரையில் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

என்னாப் பொண்ணுடா இவ… என்று புலம்புகிறாராம் காதலர்.

actress julieBigg Bossbigg boss juliecinema newsjuliKalakala mastar
Comments (0)
Add Comment