”இன்னும் ரெண்டு வாரத்துல என் வீட்டுக்காரர் வந்துடுவார்” : பிக்பாஸ் ரகசியத்தை போட்டுடைத்த வையாபுரி மனைவி!

ப்போது முதல் எபிசோட் ஒளிபரப்பப்பட்டதோ அன்றிலிருந்து கமல்ஹாசன் நடத்துகிற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பெருமளவில் சர்ச்சைகளையும், விவாதங்களையும், எதிர்ப்புகளையும் கிளப்பி விட்டிருக்கிறது.

சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் இருக்கும் 15 பிரபலங்களை ஒரே வீட்டுக்குள் அடைத்து 36 கேமராக்களைக் கொண்டு 100 நாட்கள் கண்காணிக்கும் இந்த நிகழ்ச்சி தமிழக ரசிகர்களுக்கு புதுமையான நிகழ்ச்சியாகப் பட்டாலும் அந்த வீட்டுக்குள் நடக்கிற அத்தனை சமாச்சாரங்களும் ஏற்கனவே விஜய் டிவியால் கட்டமைக்கப்பட்டவை என்பது தான் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகும் விமர்சனங்கள்.

இந்த விமர்சனங்களுக்கெல்லாம் வாரக்கடைசியில் வந்து கமல்ஹாசன் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அவர் சொல்வதை யாருமே நம்பத் தயாராக இல்லை. அந்தளவுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி என்கிற எண்ணத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நடிகர் வையாபுரியின் மனைவி பேசிய தொலைபேசி ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆண் குரல் ஒன்றும், பெண் குரல் ஒன்றும் ஒலிக்கும் அந்த ஆடியோவில்பெண் குரலுக்கு சொந்தக்காரர் நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவருமான வையாபுரியின் மனைவி என்று கூறப்படுகிறது.

மேற்படி ஆடியோவில் அந்த பெண்ணிடம் ”வையாபுரி சார் இருக்காரா? அடுத்த மாதம் எங்கள் ஊரில் கோவில் விழா ஒன்று உள்ளது அதற்கு வையாபுரி சாரை அழைக்க தொடர்பு கொண்டிருக்கிறோம்” என்று கூற அதற்கு அந்த பெண் குரலோ ’’அடுத்த மாதம் தானே அதற்குள் வந்து விடுவார், இன்னும் இரண்டு வாரங்களில் எலிமினேட் ஆகி விடுவார் அப்படி தான் தொலைக்காட்சி நிர்வாகம்” கூறியுள்ளது என்று பதில் சொல்கிறது.

உண்மையிலேயே அந்த ஆடியோவில் வருகிற பெண் குரல் வையாபுரியின் மனைவியின் குரல் தானா? என்கிற சந்தேகம் இருந்தாலும் விஜய் டிவி நடத்துகிற ரியாலிட்டி ஷோக்களில் எப்போதுமே ரியாலிட்டி இருந்ததில்லை என்பதால் அது வையாபுரியின் மனைவி தான் என்பதுதான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Bigg Bossbigg boss tamilKamal HaasanReality ShowVaiyapuriVaiyapuri Wife AudioVijay Tv
Comments (0)
Add Comment