தீபாவளி கொண்டாட்டமாக வரும் விஜய்யின் ‘பிகில்’

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் “பிகில்”.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்தை தமிழ்த் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு, விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது .

‘வில்லு’ படத்திற்கு பிறகு நயன்தாரா இந்த படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அப்பா – மகன் என இரண்டு விதமாக கேரக்டர்களில் விஜய் நடிக்கும் இப்படத்தில் மகன் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராக வருகிறார். அப்பா விஜய் படு லோக்கலாக வில்லன் கேரக்டரில் வருகிறாராம்.

விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களில் இருந்து தனித்து காணப்படும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது .

BigilMovie Newsvijay
Comments (0)
Add Comment