அதர்வா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு – ‘பூமராங்’ இயக்குனர் பெருமிதம்

டைவிடா தொடர்ச்சியான அடுத்தடுத்த பட அறிவிப்புகளுடன் அதர்வாவின் சீசன் தற்போது நீண்டிருக்கிறது.

அந்த வரிசையில் அவரது படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘பூமராங்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கிய திரில்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் ஆரம்பம் முதல் இந்த நிலை வரை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தனது குழுவினர் தான் காரணம் என பாராட்டுகிறார் இயக்குனர் கண்ணன்.

“என்னை பொறுத்தவரை, ‘பூமராங்’ படத்தின் மொத்த குழுவும் இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள். என்னைப் பற்றிய அவர்களுடைய உறுதியான நம்பிக்கை தான் இந்த படம் சுமூகமாக முடிய காரணம். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த பூமராங் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்துக்குள் முடிந்திருக்காது” என்றார்.

மேலும் நடிகர்களின் உற்சாகமான ஈடுபாடு குறித்து அவர் கூறும்போது, “அதர்வாவை போன்ற ஒரு நடிகரை கண்டுபிடிப்பது எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு உண்மையான பேரின்பம். அந்த வகையில், ஒரு இயக்குனர், தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியை ஈட்டியுள்ளேன்.

படத்தின் நாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் ஒவ்வொரு ஃபிரேமிலும் மேம்பட்ட நடிப்பை அளிக்கும் அளவுக்கு அக்கறை காட்டினர். உபென் படேல் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக நடிப்பை வழங்கினார்.

மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

AtharvaBoomerangR.Kannan
Comments (0)
Add Comment