போயபத்தி ஸ்ரீனு, ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்!

தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகளை தந்த முன்னணி பிரபலங்களான இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் தற்போதைக்கு BoyapatiRAPO என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தகவல் வெளிவந்தது முதலே ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர் இந்த நிலையில் இன்று தயாரிப்பு தரப்பு ஒரு மிகப்பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படம் குறித்தான முதல் அறிவிப்பு தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

#BoyapatiRAPO

actor Ram PothineniBoyapatiRAPO moviedirector BoyapatiSreenu