சாம் ஆண்டன் இயக்கும் இப்படத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் கமிட்டாகியிருக்கிறார். கடந்த சில நாட்களாக செய்தியாகவே இருந்த அந்த விஷயம் தற்போது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கனடாவைச் சேர்ந்த மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, “அவருடைய கேரக்டரைப் பற்றிச் சொன்னபோது அதை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை” என்றார்.
மேலும் இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு, வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. 4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், சில முக்கிய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிகிறார்கள். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.