‘மெட்ராஸ்’ நாயகிக்கு ஆந்திராவில் வந்த மவுசு!

றிமுகமான ‘மெட்ராஸ்’ படம் ஹிட்டானாலும் அதற்கடுத்த வந்த ‘கதகளி’ பெரிதாக ஆடியதாக ஸாரி… ஓடியதாக தெரியவில்லை. அடுத்ததாக வந்த ‘கணிதன்’ கணிசமாக கவனிக்க வைத்தாலும் கேத்ரீன் தெரசாவுக்கு தமிழை விட தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது.

இப்போதைக்கு தமிழில் ‘வீர தீர சூரன்’, ‘கான்’, ‘தனிக்காட்டு ராஜா’ என மூன்று படங்களில் நடித்து வரும் கேத்ரீன் தெரசாவுக்கு தெலுங்கில் திடீரென்று மவுசு கூடியிருக்கிறதாம்.

சமீபத்தில் அல்லு அர்ஜீன் ஜோடியாக அவர் தெலுங்கில் நடித்த படம் ஒன்று மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதனாலேயே சம்பளமும் கணிசமாக கூடியதோடு பட வாய்ப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன.

வரும் வரை அறுவடை செய்ய வேண்டியது தான்.

Catherine Tresaகேத்ரீன் தெரசா
Comments (0)
Add Comment