கொழு கொழுவென்றிருக்கும் கேத்ரீன் தெரசாவுக்கு ஆர்யாவுடன் நடிந்த ”கடம்பன்” படம் கை கொடுக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்தப்படம் அவரே எதிர்பார்க்காத படு தோல்வியைத் தந்து விட்டது. இந்த நொந்து போனவர் இப்போது தனது கவனம் முழுவதையும் தெலுங்கு பக்கம் செலுத்தியிருக்கிறார்.
தெலுங்கில் ஏற்கனவே அதிரடிக் கவர்ச்சியால் அங்கு அவருக்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. என்றாலும் திரும்பத் திரும்ப இரண்டாவது ஹீரோயினாகவோ அல்லது ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடவோ மட்டும் தான் கூப்பிடுகிறார்களாம். இதனால் இனி ஒரு பாடலுக்கு நடனமாட போவதில்லை எனவும், இரண்டாவது ஹீரோயினாக நடிக்கக் கூடாது எனவும் முடிவு செய்திருந்தார் கேத்ரீன்.
ஆனாலும் அவரைத் தேடி வருகிற ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகள் நின்றபாடில்லை. அப்படி வந்த போயபட்டி ஸ்ரீனுவின் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட 60 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாம் ஆட வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் இவர்கள் விட மாட்டார்கள் போல? என்று வந்த வாய்ப்பை விட மனசில்லாமல் அடுத்தடுத்து குத்துப் பாடல் வாய்ப்புகளை கமிட் செய்து கொண்டிருக்கிறார் கேத்ரீன்.
நீயெல்லாம் எங்க எப்படி இருக்க வேண்டிய அழகி!