உசரக் கொடுத்து நடிச்ச விக்ரமை ‘ஐ’ படத்தில் தேசிய விருதுக் குழுவினர் கண்டுகொள்ளாதது அவரது ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலக பிரபலங்களையே ஆத்திரமூட்டியது.
உடம்பை வருத்தி உழைத்த விக்ரமுக்கு தேசிய விருது இல்லையா? என்கிற கண்டனக் குரல்கள் கூட அப்போது எழுந்தது.
ஆனால் விக்ரமோ தேசிய விருதில் ‘ஐ’ படம் புறக்கணித்தது பற்றி எந்த கருத்தும் கூறாமல் சைலண்ட்டாகி விட்டார்.
அதோடு அந்த புறக்கணிப்பால் விரக்தியில் இருந்த விக்ரமை இன்னொரு முடிவையும் எடுக்க வைத்திருப்பது தான் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆமாம், இனி ‘உடம்பை வருத்தி நடிக்கக்கூடிய படங்களை முழுவதுமாக தவிர்ப்பது’ என்கிற நல்ல முடிவுக்கு வந்திருக்கிறாராம் சீயான் விக்ரம்.
உடம்புக்கும் கெடுதி என்பது ஒருபுறமிருக்க, அப்படி நடித்தும் கூட அந்த உழைப்புக்கு எந்த மேடையிலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போவது விக்ரமுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம்.
அதனால் இனி அந்த மாதிரியான படங்களுக்கு குட்பை சொல்லி விட்டு, பக்கா கமர்ஷியல் படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் ரிலீசாகப் போகும் படங்கள் எல்லாமே இந்த வகையறாவாகத்தான் இருக்குமாம்.
நல்ல முடிவு சீயான்!